புதுச்சேரி

கோப்பு படம்.

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் தேர்தலுக்காக புதுவை வந்துள்ளார்

Published On 2023-07-07 11:10 IST   |   Update On 2023-07-07 11:10:00 IST
  • கடந்த 2022-23-ல் ஆண்டில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 370 கோடி அளவிற்கு ஜி.எஸ்.டி. நிதி வசூலாகி உள்ளது.
  • திட்டங்களை செயல்படுத்த நிதி உதவியும் மத்திய அரசின் ஒத்திசையான அணுகு முறையும் தேவைப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரச்சாரம் செய்த மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் தற்போது அடுத்த தேர்தலுக்காக வந்துள்ளார்.

அவரின் அறிவிப்புகள் ஏதும் நிறைவேற வில்லை. தற்போதும் அவரது வருகை யையொட்டி ஆரவார அறிவிப்புகள் ஏராளமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கே.வி.கே. உள்ளிட்ட சொசைட்டி கல்லூரிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உதவி சுமார் ரூ. 3 ஆயிரத்து 800 கோடி நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2022-23-ல் ஆண்டில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 370 கோடி அளவிற்கு ஜி.எஸ்.டி. நிதி வசூலாகி உள்ளது.

ஜி.எஸ்.டி. தொகையில் தர வேண்டிய 41 சதவீதத்தில் 23 சதவீதம் மட்டுமே புதுவைக்கு வழங்கப்படுகிறது. இப்படி பல திட்டங்களில் புதுவை புறக்கணிக்கப்படுகிறது

என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நிதி உதவியும் மத்திய அரசின் ஒத்திசையான அணுகு முறையும் தேவைப்படுகிறது.

எனவே, நிதி மந்திரி புதுவை அரசின் சுமார் 11 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்து சட்டசபையுடன் கூடிய புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கி நிதிக் குழுவில் இணைக்க வேண்டும்.

மாநில சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுவையை இணைத்து ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News