புதுச்சேரி
மாணவர்களுக்கு சீருடை - சைக்கிளை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை - சைக்கிள்
- எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.
- பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர், கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச பள்ளிச் சீருடை மற்றும் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார். ஆசிரியர் அப்துல் மாலிக் வரவேற்றார. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை மற்றும் சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நிறைவில் ஆசிரியர் பூங்குன்றன் நன்றி கூறினார்.