சுனாமி நினைவுச்சின்னம்அமைக்க வலியுறுத்தி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்திருந்த காட்சி.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கோரிக்கை
- ரூ.40 லட்சம் மதிப்பில் சுனாமி நினைவு சின்னம் கட்ட நிதியை முதல்-அமைச்சர் அவர்கள் ஒதுக்கி உள்ளதாக அறிவித்தார்கள்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மீனவ பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்ய வரும் டிசம்பர் மாதத்திற்குள் சுனாமி நினைவுச்சின்னம் அமைத்து கொடுக்கும்படி மீன்வளத்துறை இயக்குனரை சந்தித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ மனு அளித்து கோரிக்கை வைத்தார் .
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழைய துறைமுகம் பின்புறம் சுனாமி நினைவு சின்னம் அமைத்து தருமாறு பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ விடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இது குறித்து பலமுறை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியிடமும், முதல்-அமைச்சர் ரங்கசாமியிடமும், அமைச்சரிடமும் மனு அளித்திருந்தார்.
மேலும் இதுதொடர்பாக முந்தைய ஆண்டு கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கையின் போது சுனாமி நினைவுச்சின்னம்அமைக்க வலியுறுத்தி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்திருந்தார் . அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் ரூ.40 லட்சம் மதிப்பில் சுனாமி நினைவு சின்னம் கட்ட நிதியை முதல்-அமைச்சர் அவர்கள் ஒதுக்கி உள்ளதாக அறிவித்தார்கள்.
அந்த நிதியினை உப்பளம் பகுதியில் நினைவுச்சின்னம் அமைத்து தரும்படி அப்பணத்தில் மீனவ மக்களும், மீனவ பஞ்சாயத்தினர் விரும்பும் வண்ணம் அமைத்து தரும்படி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜியை சந்தித்து மீண்டும் மனு அளித்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் சுனாமி நினைவுச் சின்னம் அமைத்து அப்பகுதி பொதுமக்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற வகையிலும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் நினைவுச்சின்னம் கலைநயத்துடன் அமைக்க வேண்டும் எனவும் பணிகளை உடனடியாக தொடங்குங்கள் என்று அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அவர்கள் கோரிக்கை வைத்தார்.
உடன் தொகுதி செயலாளர் சக்திவேல் துணைத் தொகுதி செயலாளர் ராஜி , மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி , கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் காளப்பன் உடன் இருந்தனர்.