புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது

Published On 2023-07-02 13:47 IST   |   Update On 2023-07-02 13:47:00 IST
  • ஒரு நாளை க்கு 30 டன் தக்காளி புதுவைக்கு இறக்கு மதி ஆகும். கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் அது 20 டன்னாக குறைந்தது.
  • தக்காளியின் விளைச்சல் மிக அதிகமாக இருந்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்தது.

புதுச்சேரி:

புதுவைக்கு கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி ஆகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்த இரு மாநி லங்களிலும் தக்காளியின் விளைச்சல் மிக அதிகமாக இருந்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்தது.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளியை சாலைகளில் கொட்டி சென்ற அவல நிலையும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் தக்காளி விளைவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் அதிக வெயில் காரணமாகவும் தாக்காளி விளைச்சல் பாதிக்கப் பட்டது. இதனி டை யே கர்நா டகா மற்றம் ஆந்திர மாநி லங்க ளில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் குறைவாக இருந்தது. அதனால் புதுவைக்கு வரக்கூடிய தக்காளியின் அளவும் குறை ந்தது. ஒரு நாளை க்கு 30 டன் தக்காளி புதுவைக்கு இறக்கு மதி ஆகும். கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் அது 20 டன்னாக குறைந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறியின் வரத்து குறைவாக இருக்கும். இதனால் விலை அதிகமாக இருந்தது மொத்த விற்பனை கடைகளில ்ரூ 90 நகரப்பகுதி, கிராமப்ப குதிகளில் ரூ.100, சில கடைகளில் ரூ120 க்கும் விற்பனையானது.

இதனால் இல்லத்தரசிகள் பாதிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News