புதுச்சேரி

கோப்பு படம்.

நோனாங்குப்பம் படகு குழாம் ஊழியர்களுக்குஅமைச்சர் லட்சுமிநாராயணன் எச்சரிக்கை

Published On 2023-05-29 11:17 IST   |   Update On 2023-05-29 11:17:00 IST
  • ஊழியர்களை அழைத்து, படகுகளை சரியாக இயக்காமல் தனியார் படகு குழாமிற்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா?
  • அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆளுக்கு ஒரு சங்கம், வைத்து பிரிவினை யோடு செயல்படுவது சரியில்லை.

புதுச்சேரி:

புதுவை நோணாங் குப்பத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோடை விடுமுறையினால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

படகு குழாமில் பெரிய இயந்திர படகுகள் பழுதானதால் இயங்காது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி யடைந்தனர். நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் அங்கிருந்த ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், படகு குழாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஊழியர்களை அழைத்து, படகுகளை சரியாக இயக்காமல் தனியார் படகு குழாமிற்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா? அடுத்தமுறை இதேபோல செயல்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார்.

இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட படகை ஊழியர்கள் இயக்கினர். அரசு படகு குழாமிற்கு அருகே தனியார் படகு குழாம் உள்ளது.

அரசு படகு குழாமில் நெரிசலை ஏற்படுத்தினால் வேறு வழியின்றி தனியார் படகு குழாமை சுற்றுலா பயணிகள் நாடிச்செல்வர். இதனால் சுற்றுலாத்துறை ஊழியர்கள் ஒரு சிலர் படகுகளை இயக்காமல் இருப்பதும், பிரிவினை ஏற்படுத்தி வருவதும் தெரியவந்தது.

இதையும் கண்டித்த அமைச்சர் லட்சுமிநாராயணன், ஆளுக்கு ஒரு சங்கம், வைத்து பிரிவினை யோடு செயல்படுவது சரியில்லை.

இதேபோல அடுத்தமுறை நடந்தால், இதில் ஈடுபடுவோர் கண்டிப்பாக பணிநீக்கம் செய்யப்ப டுவார்கள் என மீண்டும் எச்சரிக்கை செய்தார்.

Tags:    

Similar News