புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் வருவாயை அதிகரிக்க வேண்டும்

Published On 2023-06-28 05:15 GMT   |   Update On 2023-06-28 05:15 GMT
  • அரசு துறை செயலர்களுக்கு நிதித்துறை அறிவுறுத்தல்
  • அரசின் உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய், வணிகவரி துறை வருவாய் பெருகும். இந்த முன்மொழிவுகளை உடன டியாக வழங்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை நிதித்துறை துணை செயலர் ரத்னகோஷ் கிஷோ அரசு துறை செயலர்கள், தலைவர்கள், தன்னாட்சி அமைப்பு தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மானிய ஒதுக்கீடை குறைக்கவும், சொந்த வருவாயை பெருக்கவும் இந்திய அரசு புதுவை நிர்வாகத்துக்கு அழுத்தம் தருகிறது. இந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மத்திய உதவியை கூடுதலாக பெற வாய்ப்பில்லை. இதை கருத்தில்கொண்டு, கவர்னர் வருவாய் வளங்களை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுவை அரசு சொத்துவரி, ஜி.எல்.ஆர் மதிப்பு, பயனாளிகள் கட்டண மேம்பாடு போன்ற முன்மொழிவுகளை புதுவை அரசின் பரிசீலனைக்கு வழங்கலாம். இதன்மூலம் அரசின் உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய், வணிகவரி துறை வருவாய் பெருகும். இந்த முன்மொழிவுகளை உடனடியாக வழங்க வேண்டும்.

புதுவை அரசின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகள், வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை உள் வருவாய் வளங்களை அதிகப்படுத்தி தன்னிறைவு அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News