கோப்பு படம்.
குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்த டிபன் கடை ஊழியர் பலி
- மது குடிப்பது வழக்கம். ஒரு சில நாட்கள் ஓட்டல் வேலைக்கு செல்லாமல் மது குடிப்பார்.
- கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு காமராஜர் நகர் கென்னடி தெருவை சேர்ந்தவர் வினோத். இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரி எதிரே தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது டிபன் கடையில் சென்னைv ஆழ்வார் திருநகரை சேர்ந்த நாகராஜ்(49) என்பவர் கடந்த 2 மாதமாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன.
மது குடிக்கும் பழக்க முள்ள நாகராஜ் தினமும் சாம்பாதிக்கும் பணத்தில் அதிகமாக மது குடிப்பது வழக்கம். ஒரு சில நாட்கள் ஓட்டல் வேலைக்கு செல்லாமல் மது குடிப்பார்.
அதுபோல் நாகராஜ் டிபன் கடைக்கு வேலைக்கு செல்லாமல் பூத்துறை மெயின் ரோட்டில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் பாலத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது குடிபோதையில் அவர் தவறி விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்தி லேயே இறந்து போனார். இதுகுறித்து டிபன் கடை நடத்தி வரும் வினோத் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.