கோப்பு படம்.
சங்கராபரணி புஷ்கரணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
- உள்ளூர் மக்களை விட வெளியூர் பக்தர்களே அதிக அளவில் வந்து நீராடி சென்றனர்.
- சாமிக்கு தீர்த்தவாரியும், 6 மணிக்கு கங்காஆரத்தி நடந்தது.
புதுச்சேரி:
புதுவையில் முதல்முறை யாக வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது.
மே 3-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் நாள்தோறும் 8 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாகம், மதியம் 12 முதல் ஒரு மணி வரை தீர்த்தவாரி, 6 முதல் 7 மணி வரை கங்கா ஆரத்தி, இரவு 7 முதல் 10 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடத்தப் படுகிறது. உள்ளூர் மக்களை விட வெளியூர் பக்தர்களே அதிக அளவில் வந்து நீராடி சென்றனர்.
முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.
இதனால் திருக்காஞ்சி திணறியது. அரசு விடுமுறை நாளான இன்றும் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து புனித நீராடினர்.
ஆயிரக்க ணக்கான பக்தர்கள் ஒரே நாளில் நீராடினர். ராசி, நட்சத்திரம் தெரியாத அனைவரும் நீராடலாம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோவில் தலைமை குருக்கள் சரவணன் சிவாச்சாரியார் தலை மையில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷே கமும், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சாமிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு கங்காஆரத்தி நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.