புதுச்சேரி
கோப்பு படம்.
காவலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
- தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புதுச்சேரி:
மடுகரை அருகே சிறுவந்தாடு மோட்சகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் கலிதீர்த்தாள் குப்பத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தான் வேலை பார்க்கும் நிறுவ னத்தின் நுழைவுவாயிலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணியில் ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெருமாள் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.