கோப்பு படம்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருட்டு
- வழக்கம் போல் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே கரையாம்பத்தூரை அடுத்த பனையடிகுப்பம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு என துணை ஆரம்ப சுகாதார நிலையம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்பு டாக்டர் மற்றும் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலைய த்தை பூட்டிவிட்டு கரையம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
பின்னர் வழக்கம் போல் ஊழியர்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வந்தனர்.
அப்போது கதவை திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கம்ப்யூட்டர் குளுக்கோ மீட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். இதுகுறித்து டாக்டர் கிருத்திகா கொடுத்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.