கோப்பு படம்.
தனக்காக வைத்திருந்த மதுவை குடித்த நண்பரை கத்தியால் குத்திய வாலிபர்
- எனக்காக வைத்திருந்த மது எங்கே என விமலிடம் கேட்ட பொழுது, அஜய் தூங்கியவுடன் எல்லா மதுவையும் குடித்து விட்டதாக விமல் கூறியுள்ளார்.
- கோட்டக்குப்பம் போலீசார் அஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
பெரியக்கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ் மகன் விமல் (வயது 20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் அஜய் (வயது 20). இருவரும் உறவினர்கள். சம்பவத்தன்று இரவு இருவரும் அங்குள்ள தென்னந்தோப்பில் விடிய விடிய, மது அருந்தி உள்ளனர்.
மறுநாள் விடிந்து இருவருக்கும் போதை கலைந்த நிலையில் அஜய் எழுந்து மீதமிருந்த மது பாட்டிலை பார்த்த பொழுது அதில் மது இல்லை. எனக்காக வைத்திருந்த மது எங்கே என விமலிடம் கேட்ட பொழுது, அஜய் தூங்கியவுடன் எல்லா மதுவையும் குடித்து விட்டதாக விமல் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அஜய் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலை சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் காயமடைந்த விமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விமல் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் அஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.