புதுச்சேரி

கோப்பு படம்.

முதல் -அமைச்சரின் சுதந்திரதின உரை ஏமாற்றத்தை அளித்துள்ளது

Published On 2023-08-17 08:25 GMT   |   Update On 2023-08-17 08:25 GMT
  • முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
  • பிற்பட்டோர் கணக்கெடுப்பு எவ்வளவு காலத்தில் முடிவு பெற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

புதுச்சேரி:

முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் சுதந்திர தின உரையில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்கு றுதிகள் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. பிற்பட்டோர் கணக்கெடுப்பு எவ்வளவு காலத்தில் முடிவு பெற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

பஞ்சாலைகள் குறித்து அரசின் கொள்கை நிலை என்ன.? ஜவுளி பூங்கா குறித்து எந்த தகவலும் புதுவை யிலிருந்து வரவி ல்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது பற்றி தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். 100 நாட்களுக்கு மேலாக போராடும் புதுவை அரசின் சார்பு நிறுவன தொழிலாளர்கள் சம்பளம் குறித்து எந்தக் கருத்தையும் முதல்-அமைச்சர் தெரிவிக்கவில்லை.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்கும் திட்டங்கள் பற்றி வாய்திறக்க வில்லை. பெருகி வரக்கூடிய திருட்டு, கொலை, கொள்ளை, போதை பொருள்கள் நடமாட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை. ரேசன் கடைகளை திறப்போம் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கட்டை புதுப்பிக்க எதிர்ப்பு எழுந்து ள்ள நிலையில் அது குறித்தும் முதல்-அமைச்சர் தெரிவிக்க வில்லை. ஒட்டு மொ த்தத்தில் முதல்-அமைச்சரின் சுதந்திர தின உரை மாநில மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இவ்வாறு நாரார கலைநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News