புதுச்சேரி

ஆசிய ஆக்கி போட்டி குறித்து அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் புதுவை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி. 

விளையாட்டு மைதானங்கள் விரைவில் மேம்படுத்தப்படும்

Published On 2023-07-29 06:08 GMT   |   Update On 2023-07-29 06:08 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
  • விளையாட்டு வீரர்களுக்கு 2017 முதல் 2023 வரை வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.8 கோடி விரைவில் வழங்கப்படும்.

புதுச்சேரி:

சென்னையில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 3-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது.

போட்டிக்கான வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தி ஆக்கி போட்டி குறித்து மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இந்த கோப்பை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த கோப்பை புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கிற்கு எடுத்து வரப்பட்டது.

ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.. அனிபால்கென்னடி, புதுவை ஆக்சி சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

புதுவை அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக தனி துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. புதுவை ஆக்கி மைதானம் சேதமடைந்துள்ளது. விரைவில் ரூ.7 கோடியில் மைதானம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு 2017 முதல் 2023 வரை வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.8 கோடி விரைவில் வழங்கப்படும்.

புதுவை விளையாட்டு வீரர்கள் உலகளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதுவை நகர், கிராமப்புறங்களில் விளை யாட்டு மைதானங்களை சீரமைக்க ரூ.11 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று மைதானங்கள் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News