புதுச்சேரி

 முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் புதுவை கவர்னர், தலைமை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்த காட்சி.

புதிய பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்

Published On 2023-08-02 05:28 GMT   |   Update On 2023-08-02 05:28 GMT
  • நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
  • எதிர்காலத்தில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியதில்லை.

புதுச்சேரி:

புதுவை மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் புதுவை கவர்னர், முதல்-அமைச்சர், மாவட்ட கலெ க்டர், தலைமை செயலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி வேகமாக வளர்ந்துவரும் ஒரு நகரம், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் வேகமான வளர்ச்சியை கணக்கிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தற்போதைய பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் உருவாகும்,

குறிப்பாக குடும்பத்துடன் பயணம் செய்யும் பொது மக்கள் மேலும் அலைச்சலுக்கும், தேவையற்ற செல வினங்களுக்கு உள்ளா வார்கள்.

இதனை கருத்தில் கொண்டு தற்போதைய பஸ் நிலையத்தின் பின்புறமுள்ள அரசு பணிமனை வளா கத்தை ஒன்றிணைத்தால் கூடுதல் இடவசதி கிடைக்கும், வாகன போக்கு வரத்து நெரிசல் முற்றிலும் குறையும், எதிர்காலத்தில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியதில்லை.எனவே பஸ் நிலையத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News