கோப்பு படம்.
நகராட்சி கட்டிடம் போலீஸ் பூத்தாக தொடர வேண்டும்
- போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட போலீஸ் பூத்தாக மாற்றி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
- பொதுமக்கள் பாதுகாப்புக்காக போலீஸ் பூத்தாக செயல்பட வைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க .துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழக எல்லையான முத்தியால்பேட்டை காந்திவீதி, சாலை தெரு சந்திப்பில் உள்ள நகராட்சி கட்டிடத்தை நான் எம்எல்ஏவாக இருந்தபோது பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட போலீஸ் பூத்தாக மாற்றி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
அதிகாரிகளின் மெத்தனத்தால் சில மாதங்களாக போலீஸ் பூத் மூடப்பட்டுள்ளது
இந்த நிலையில் பூத் கட்டிடடத்தை தனியாருக்கு தாரை வார்க்க நகராட்சி முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நகராட்சியின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முன்பு போலவே பொதுமக்கள் பாதுகாப்புக்காக போலீஸ் பூத்தாக செயல்பட வைக்க வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.