ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
- இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை
- கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்த அரசை முடக்கி வேலைவழங்க முட்டுக்கட்டையாக இருந்தார்.
புதுச்சேரி:
புதுவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதை இளைஞர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. 10 ஆண்டாக படித்த தகுதியான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாமல் உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்த அரசை முடக்கி வேலைவழங்க முட்டுக்கட்டையாக இருந்தார்.
புதுவையில் பலர் ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தர அரசு நடவடிக்கை எடுக்காமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குவது இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை கெடுக்கும்.
என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு இதனை தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் இறங்கி வருகிறது. ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.