புதுச்சேரி

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை அரசு எடுத்துள்ளது

Published On 2023-07-18 08:54 GMT   |   Update On 2023-07-18 08:54 GMT
  • ½ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தை போல் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் அரசின் இடங்களில் 7½ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசை வலியுறுத்தி ஜென்மராக்கினி கோவில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட சட்டத்தை புதுவையிலும் கொண்டுவர வேண்டும் என சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திய போது அரசியல் காழ்புணர்ச்சியால் அந்த சட்டத்தை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமல்படுத்த வில்லை.

புதுவையில் தேசிய ஜனநாயக முன்னணியில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு கவர்னர், முதல் அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்தி னோம்.அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு இல்லாததால் ஒன்று அல்லது 2 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த ஆண்டு சுமார் 389 மருத்துவ இடங்கள் அரசு இடங்களாக கிடைத்துள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7½ சதவீத உள் ஒதுக்கீடு அளித்தால் சுமார் 30 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே தான் உள்ஒதுக்கீடு கேட்கிறோம். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு சாதகமான நிலை பாட்டில் அரசு இருப்பதால் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கவில்லை. புதுவை தி.மு.க.வுக்கு மாணவர்கள் பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனை களி லும் அக்கரை இல்லை. தங்களது தொழில் வளம் பாதிக்காத வகையில் அவ்வப்போது கவர்னர் பற்றி விமர்சனம் செய்தால் போதும் என்ற நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News