புதுச்சேரி

ஏரிவாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஏரிவாய்க்கால் தூர்வாரும் பணி-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2022-11-16 09:38 IST   |   Update On 2022-11-16 09:38:00 IST
  • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட உருவையாறு ஏரிக்கரை முதல் செல்வா நகர் வழியாக ஆற்றுக்கு செல்லும் ஏரி வாய்க்கால் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை.
  • இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உடனடியாக ரூ.2 லட்சம் செலவில் ஏரிவாய்க்காலை தூர்வார உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட உருவையாறு ஏரிக்கரை முதல் செல்வா நகர் வழியாக ஆற்றுக்கு செல்லும் ஏரி வாய்க்கால் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை.

மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளில் சூழ்வதால் ஏரி வாய்க்காலை தூர்வாரி தரும்படி அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உடனடியாக ரூ.2 லட்சம் செலவில் ஏரிவாய்க்காலை தூர்வார உத்தரவிட்டார்.

இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஜெயராமன், வில்லியனூர் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்க மன்னார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News