கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரியிடம் மனு அளித்த காட்சி.
குபேர் திருமண மண்டபத்தை உடனடியாக சீரமைக்க டெண்டர்
- கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரியிடம் மனு
- பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளுக்காக கல்யாண மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சிக்கு சொந்தமான குபேர் மண்டபம் உள்ளது.
இந்த மண்டபத்தை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புரணமைக்க இந்த நிதி ஆண்டில் டெண்டர் விட வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டிருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்று டெண்டர் விடப்பட்டு 2024 கட்டுமான பணி முடித்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார். ஆனால் டெண்டர் இன்னும் விடப்படவில்லை. இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மனுவில் விரைவில் டெண்டர் வைத்து பணியை தொடங்க நடவடிக்கை எடுப்பதோடு உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளுக்காக கல்யாண மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நிகழ்ச்சியின் போது தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம் ராகேஷ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இருதயராஜ், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.