கோப்பு படம்.
தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- தமிழக வாரிய பாடத்தில் படிக்கும் போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மாணவன் 6 பாடங்கள் படிக்க வேண்டும்.
- தமிழும், ஆங்கிலமும் கட்டாய பாடங்களாக இருக்கின்றன.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வாரிய பாடத்தில் படிக்கும் போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மாணவன் 6 பாடங்கள் படிக்க வேண்டும். தமிழும், ஆங்கிலமும் கட்டாய பாடங்களாக இருக்கின்றன. ஆனால் சி.பி.எஸ்.இ. முறையில் 5 பாடங்கள்தான் உள்ளது.
இதில் ஆங்கிலம் கட்டாய பாடம். தமிழ் பாடத்தை விரும்பினால் படிக்கலாமே தவிர கட்டாயமில்லை. கலை மற்றும் மானுட பிரிவில் 19 விருப்ப பாடப் பிரிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆங்கிலம் கட்டாய பாடம். ஆங்கிலத் தோடு 4 பாடங்கள் உள்ள ஒரு பிரிவை மாணவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள லாம். இதனால் மாணவர்கள் தமிழ் படிக்காமலே மேல்நிலைக் கல்வியை முடித்து விடுவார். எனவே புதுவை மக்களின் உணர்வு களை புரிந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முன்பு போல் 6 பாடங்களாக மாற்றி அதில் தமிழை கட்டாய பாடமாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கூட குடிமை பணி போன்ற அகில இந்திய பணி தேர்வில் தமிழ் பாடத்தை ஒரு பாடமாக சேர்த்துள்ளது. தமிழில் பிரதானத் தேர்வு எழுதலாம் என்று அனுமதி அளிக்கிறது. தமிழ் பேசும் புதுவையின் மைந்தர்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.