புதுச்சேரி

தீனியாக வழங்கப்பட்ட தர்பூசணி பழங்களை போட்டிபோட்டு உண்ணும் வனத்துறை மான்கள்.

மான்களுக்கு உணவளித்து பிறந்த நாள் கொண்டாடிய தமிழ் அறிஞர்

Published On 2023-04-29 05:26 GMT   |   Update On 2023-04-29 05:26 GMT
  • தமிழ் புலவர்கள் மற்றும் அனைவருக்கும் மகளிர் நலம், மாந்தர் நலம், இளையோர் நலம் என்ற விழிப்புணர்வு நூல்கள் வழங்கப்பட்டது.
  • மான்களுக்கு உணவளித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் புதுவையில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை தன்னம்பிக்கை கலைக்குழு சார்பில் முன்னாள் பேராசிரியரும் தமிழ் அறிஞருமான இளங்கோவின் பிறந்தநாள் விழா வனத்துறை வளாகத்தில் நடந்தது.

தன்னம்பிக்கை கலை குழு சார்பில் வேட்டி சட்டை, புடவை, மற்றும் வெற்றிலை பாக்கு, பழங்களுடன் தமிழ் அறிஞர் இளங்கோவிற்க்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையில் உள்ள மான்களுக்கு மாதுளை, கொய்யா, கிர்ணி பழம், தர்பூசணி, கேரட் , வெள்ளரி உள்ளிட்ட பல்வேறு காய்கள் மற்றும் பழ வகைகளை இளங்கோவன் வழங்கினார். மேலும்,வனத்துறையில் மகிழம்பு மர கன்றுகள், விதைகளையும் நட்டார்.

விழாவில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் தமிழ் புலவர்கள் மற்றும் அனைவருக்கும் மகளிர் நலம், மாந்தர் நலம், இளையோர் நலம் என்ற விழிப்புணர்வு நூல்கள் வழங்கப்பட்டது. பிறந்தநாள் என்றால் அதை ஆடம்பரமாக கொண்டாடி விளம்பரம் செய்து வருபவர்கள் மத்தியில் தமிழறிஞர் ஒருவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறையில் உள்ள மான்களுக்கு உணவளித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் புதுவையில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News