புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு விழா அழைப்பிதழில் தமிழ் புறக்கணிப்பு

Published On 2023-08-10 10:43 IST   |   Update On 2023-08-10 10:43:00 IST
  • வையாபுரி மணிகண்டன் கண்டனம்
  • வரவேற்பு பேனர்களும் தமிழில் இல்லாமல், முழுமையாக ஆங்கிலத்திலேயே இருந்தது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க.துணைசெயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு அதிகாரிகளுக்கு மின் ஆளுமை குறித்த புத்தாக்க பயிற்சி விழா அழைப்பிதழில் தமிழில் இல்லாமல் முழுமையாக ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. விழா வரவேற்பு பேனர்களும் தமிழில் இல்லாமல், முழுமையாக ஆங்கிலத்திலேயே இருந்தது.

இதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

எதற்கெடுத்தாலும்தமிழ், தமிழர்கள்எனக்கூறும் கவர்னர் பங்கேற்ற விழாவிலேயே தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இனியாவது அரசு விழாக்கள் அனைத்திற்கும் தமிழில் அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தமிழ்மொழியை புறக்கணிக்கும் அரசை கண்டித்து, தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News