புதுச்சேரி
புதுச்சேரியில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6500 ஆக உயர்வு - துணை நிலை ஆளுநர் ஒப்புதல்
- மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்வு.
புதுச்சேரி:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மீன் வளம், மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் இயற்கை பேரிடர் கால நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆகவும், விடுமுறைக்கால நிதியுதவி ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.