கடல் வழியாக உலகை சுற்ற தாயாராகும் புதுவை பெண் கமாண்டர்
- இந்திய கடற்படையில் பணியாற்றும் லெப்டினெட் கமாண்டர் தில்னா மற்றும் ரூபா ஆகிய இருவரில் ஒருவர் சவாலான பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
- கடற்படையில் சேருவதற்கு முன் மாலுமியாக இருந்த அவர் பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரி:
முன்னாள் கடற்படை அதிகாரியான அபிலாஷ் டோமி கடல் வழியாக படகில் உலகை சுற்றி முடித்தார். இதையடுத்து, இந்திய கடற்படை ஒரு பெண் அதிகாரியை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்திய கடற்படையில் பணியாற்றும் லெப்டினெட் கமாண்டர் தில்னா மற்றும் ரூபா ஆகிய இருவரில் ஒருவர் சவாலான பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதில் தில்னா, கடற்படையில் தளவாட அதிகாரியாக உள்ளார்.
ரூபா கடற்படை ஆயுத ஆய்வு அதிகாரியாக உள்ளனர். இருவரும் கோவாவில் பணியில் உள்ளனர். புதுவையைச் சேர்ந்த ரூபா அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றுள்ளார்.
பெங்களூரில் உள்ள நேஷனல் ஏர் ஸ்பேஸில் உதவியாளராக பணியாற்றினார். கடற்படையில் சேருவதற்கு முன் மாலுமியாக இருந்த அவர் பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முக்கியமாக கேப் டவுனில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு ஐ.என்.எஸ்.வி. டரினா கப்பலில் பெண் அதிகாரிகள் உலகம் முழுவதும் பயணம் செய்தனர். அதில் தில்னாவும், ரூபாவும் பாய்மரம் கப்பலில் 2 ஆண்டுகளில், 21,800 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் பயணித்துள்ளனர். கேப்ரியோ பந்தயத்தில் பங்கேற்றுள்ள தில்னா மற்றும் ரூபா உட்பட 6 பேர் கொண்ட குழுவினர், மே 24-ல் கோவாவுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய கடற்படை பெண் அதிகாரி ஒருவரை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் இடம் பெறபோவது புதுவை ரூபாவா அல்லது தில்னாவா என்பது விரைவில் தெரியும். தேர்ந்தெடுக்கப்படும் நபர் தனி படகில் உலகை சுற்றிவர உள்ளார்.