புதுச்சேரி
பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி ஜிப்மரில் நோயாளி தற்கொலை
- கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார்.
- தற்கொலை குறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 43), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு ஜெயலட்சுமி எழுந்து பார்த்தபோது, செல்வம் தனக்குதானே முகத்தில் பிளாஸ்டிக் பையால் மூடி, மருந்து ஏற்றும் பிளாஸ்டிக் டியூப்பால் கழுத்தை இறுக்கி கட்டிய நிலையில் கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி நர்சை அழைத்து முதலுதவி செய்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.