புதுச்சேரி

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது- மத்திய சுகாதார அமைச்சர்

Published On 2022-06-25 15:30 GMT   |   Update On 2022-06-25 15:30 GMT
  • சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.
  • பொது சுகாதாரப் பள்ளி நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

புதுச்சேரியில் ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் திறப்பது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. நாடு பொது சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வலுவான முறையை உருவாக்கியது.

ஜிப்மர் சர்வதேச பொது சுகாதாரக் கல்வி நிலையம் பொது சுகாதாரத்தில் மிக உயர்ந்த பாடத்தை வழங்கும். நிலையான மதிப்பு அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும். மேலும், சுகாதாரத் துறையில் சேவைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான திறனை வலுப்படுத்தும்.

பொது சுகாதார கல்வி நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.66 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் நம் நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, முழு உலகத்திற்கும் சேவை செய்யும். இது இந்தியத் தத்துவமான வசுதைவ குடும்பம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்). மருத்துவ மாணவர்கள், சுகாதார நிர்வாகிகள் இரக்கத்துடன் சேவைகளை வழங்குவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News