புதுச்சேரி

புதுவை நட்சத்திர ஓட்டல்களில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கேக் தயாரிக்க மதுபானத்தில் பழங்கள் ஊறவைப்பு

Published On 2023-10-18 14:50 IST   |   Update On 2023-10-18 14:50:00 IST
  • வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.
  • 150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டன.

புதுச்சேரி:

புதுவை நட்சத்திர ஓட்டல்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி நட்சத்திர ஓட்டல்களில் தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.

வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.

Tags:    

Similar News