புதுச்சேரி

புதுவை புதிய பஸ் நிலையம் முன்பு டெம்போவை நிறுத்தி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்ட காட்சி.

புதுவையில் டெம்போக்கள் திடீர் வேலை நிறுத்தம்

Published On 2023-04-22 14:27 IST   |   Update On 2023-04-22 14:27:00 IST
  • அடிப்பை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
  • சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த தனியார் டிக்காசை ரூ 10ல் இருந்து ரூ20 உயர்த்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து முத்தியால்பேட்டை, கோரிமேடு, முத்திரையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகிறது.

புதுவையை பொருத்த வரையில நகரப் பகுதிகளுக்குள் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் புதுவை மக்கள் மட்டுமன்றி வெளியூரில் இருந்து வருபவர்களும் டெம்போக்களையே அதிகம் பயன்படுத்துவர்.

பஸ் நிலையத்தில் டெம்போக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு நகராட்சி அடிக்காசு வசூல் செய்கிறது. இந்த அடிக்காசு வசூலுக்கு நகராட்சி சார்பில் டெண்டர் விடப்படும். சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த தனியார் டிக்காசை ரூ 10ல் இருந்து ரூ20 உயர்த்தியுள்ளது.

இதற்கு டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளனர். புதுவை பஸ் நிலையத்தில் தங்களுக்கு எந்தவித அடிப்பை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

டெம்போ நிறுத்து மிடத்தில் மேற்கூரை சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது குடிநீர், கழிவறை வசதி இல்லை. பஸ் நிலையத்தின உட்புறத்தில் 4 டெம்போக்களை மட்டுமே நிறுத்த முடியும். இவற்றை எல்லாம் சீரமைத்த பிறகுதான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 1-ந் தேதி புதுவை நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையம் எடுக்கவிலலை 1-ந் தேதியில் இருந்து அடிகக்காசும் செலுத்தவில்லை.

இந்த நிலையில், டெண்டர் எடுத்த தனியார் உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என டெம்போ டிரை வர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது இதனால் டெம்போ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.

காலை 11 மணி முதல் டெம்போ இயக்குவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.நகரம் மற்றும் புறநகர் பகுதியில் ஒடும் 125 டெம்போக்கள் இயங்கா ததால் பொதுமக்கள் பாதிக்கபட்டனர். இன்று சனிக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் டெம்போ இல்லாமல் அவதிக்கு ள்ளாகினர்.

இந்நிலையில் ஒரு சில டெம்போக்கள் இயங்கியது.

Tags:    

Similar News