புதுச்சேரி

நத்தமேடு பகுதியில் உள்ள சிறிய பழத்தை உடைக்க மடுகரை தவளக்குப்பம் நெடுஞ்சாலையை தடுத்து மணல் மேடு அமைத்து இருப்பதை படத்தில் காணலாம்.

பாலம் உடைப்பால் போக்குவரத்து திடீர் மாற்றம்

Published On 2023-06-07 08:07 GMT   |   Update On 2023-06-07 08:07 GMT
  • தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை செல்ல தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.
  • திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பாலத்தை உடைக்க ஏற்பாடு செய்திருந்தனர்‌.

புதுச்சேரி:

தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை செல்ல தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.

இதில் கரிக்கலாம்பாக்கத்தை அடுத்த நத்தமேடு கிராமத்தில் இருந்த குறுகிய பாலமாக இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. சாலையை அகலப்படுத்தி புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை கடந்த 6 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை செய்யப்பட்டது.

இந்த நிலையில்  திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பாலத்தை உடைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

முதல் கட்டமாக மடுகரை யில் இருந்து வர வேண்டிய வாகனங்களையும், தவளக்குப்பத்தில் இருந்து வரும் வாகனங்களையும் தடுக்கும் வகையில் சாலை யின் குறுக்கே மண்ணை கொட்டி மேடு அமைத்தனர்.

இதனால் அந்த வழியாக வந்தவர்கள் திடீரென மண் கொட்டி போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதைப்போல அரசு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.வும் கார்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

பின்பு காரில் இருந்த ராஜவேலு, லட்சுமிகாந்தன் ஆகிய 2 பேரும் இறங்கி பாலத்திற்கு அருகே வந்து பார்த்த போது பாலத்தை உடைக்க ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து அங்கி ருந்த அதிகாரி களிடமும், காண்ட்ராக்டரி டமும் விவரம் கேட்டறிந்தனர். பின்னர் பொதுமக்களை மாற்று விழியில் செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் இருபுறமும் மாற்று வழிக்கான பேனர் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதோடு போலீசாரை அந்த பகுதியில் பாதுகாப்புக்கு இருக்க வலியுறுத்தினர். 

Tags:    

Similar News