புதுச்சேரி

பாகூர் தாசில்தார் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.


தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

Published On 2023-10-25 15:45 IST   |   Update On 2023-10-25 15:45:00 IST
  • இலவச லேப்-டாப் வழங்க கோரிக்கை
  • போராட்டத்திற்கு மாணவர் சங்க பாகூர் இடைக்கமிட்டி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கி னார். செயலாளர் பாபு, சத்தியசீலன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:

இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாகூர் தாசில்தார் அலுவலகத்தை மாண வர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் தரமற்ற மதிய உணவை வழங்கும் அக்ஷய பாத்ரா வுடன் உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் வாரத்தில் 3 நாட்கள் முட்டையுடன் கூடிய தரமான மதிய உணவை அரசு வழங்க வேண்டும்.

காலாண்டு தேர்வு முடிந்தும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் உடனடி யாக ஆசிரியர் பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும். அறிவித்த இலவச லேப்-டாப்பை உடனே வழங்க வேண்டும்.

சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை அனைத்து பள்ளிகளும் உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தகூடாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பாகூர் பாரதி அரசு பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து பேரணியாக சென்று தாசில்தார் அலுவ லகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்திற்கு மாணவர் சங்க பாகூர் இடைக்கமிட்டி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கி னார். செயலாளர் பாபு, சத்தியசீலன் முன்னிலை வகித்தார்.

இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன் குமார் கண்டன உரை ஆற்றினர்.

இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News