புதுச்சேரி

மருத்துவக் கல்லூரியில் 10 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும். 

11-ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு மாலையில் 2 மணி நேரம் பயிற்சி அளிக்க வேண்டும்.

Published On 2023-04-21 08:45 GMT   |   Update On 2023-04-21 08:45 GMT
  • முன்னாள் எம்.பி. ராமதாஸ் யோசனை
  • 2 வருடங்களுக்கு தலை சிறந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்பட வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதற்காக இந்த ஆண்டு ரூ.924.68 கோடி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. இருப்பினும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரம் உயர்வ தற்கான முயற்சிகளில் பின்தங்கியே உள்ளோம்.

எந்த பாடத்திட்ட மாக இருந்தாலும் மாணவர்களின் கற்கும் ஆற்றல் உயர்ந்தால்தான் கல்வியின் தரம் உயரும். அரசு பள்ளி மாணவர்களிடையே, படித்தல் திறன், எழுதுதல் திறன், கணிதத் திறன், கல்வி கற்கும் அறிவு, சிந்திக்கும் திறன் ஆகிய வற்றில் குறைபாடுகள் அதிகம் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வுகள் கூறுகின்றன.

புதுவை அரசு பள்ளிகளின் தரத்தை தேசிய தேர்வுகளில் மாணவர்கள் பெறும் தேர்ச்சி எண்ணிக்கை பொறுத்து தெரிந்து கொள்ளலாம். அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பில் சேர அரசு சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் 11 -ம் வகுப்பு வந்தவுடன் ஒவ்வொரு நாளும் மாலை யில் 2 மணி நேர பயிற்சியை அரசு செலவில் 2 வருடங்களுக்கு தலை சிறந்த பயிற்சியாளர்களால் கொடுக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வில் தகுதி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும். 500

மதிப்பெண்களுக்கு மேல் பெறும் இப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு உதவித்தொகை வழங்க வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்பு களுக்கு அனுபவம் வாய்ந்த அற்பணிப்புள்ள ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் நீட் தேர்வில் அதிக தேர்ச்சியை கொடுக்கும் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஊக்கத்தொகை, போன்றவற்றை வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தைஅரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News