புதுச்சேரி

சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கி மாணவர்கள் சாதனை

Published On 2023-06-09 14:07 IST   |   Update On 2023-06-09 14:07:00 IST
  • கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் வார விழா கொண்டாடப்பட்டது.
  • இயற்கை வளங்கள் பாதுகாப்பு, கடல்நீர் மாசு குறித்த விழிப்புணர்வு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

புதுச்சேரி:-

கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் வார விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு, கடல்நீர் மாசு குறித்த விழிப்புணர்வு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும் புதுவையில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 500 மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கி சர்வதேச சாதனை படைத்தனர்.

இதற்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ், கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட துணை செயல் அலுவலர் ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கியதிற்கு, சர்வதேச ஸ்டார் புக் ஆப்ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்திய கலாசாரத்திற்கான தூதர் அரவிந்த்குமார், தீர்ப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் சர்வதேச சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதினை கல்லூரி இயக்குனர் ஆன்ட்ரூ ஜானிடம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குளோரிமெர்லின், சிவசங்கரி மற்றும் மாண வர்கள் செய்திருந்தனர். முடிவில் சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பா ளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News