புதுச்சேரி

கோப்பு படம்.

தொடுதிரை கணினிகள் செயல்பட நடவடிக்கை

Published On 2023-06-12 13:59 IST   |   Update On 2023-06-12 13:59:00 IST
  • வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
  • தொழில்நுட்ப தொடுதிரை கணினி இயங்கி வந்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவை இயங்காமல் உள்ளது.

புதுச்சேரி:

மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகங்கள், துணை மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகம் போன்றவற்றில் தகவல் தொழில்நுட்ப தொடுதிரை கணினி இயங்கி வந்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவை இயங்காமல் உள்ளது.

இந்த தகவல் தொடுதிரை கணினிகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது தகவல் தொடுதிரை கணினிகளையும் மக்கள் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர் செய்து அல்லது புதியதாக அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News