புதுச்சேரி

கோப்பு படம்.

சுருக்கெழுத்தர் பணி தேர்வை ரத்து செய்து புதிதாக நடத்த வேண்டும்

Published On 2023-05-02 11:49 IST   |   Update On 2023-05-02 11:49:00 IST
  • புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
  • நடந்த போட்டித் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் 35 சுருக்கெழுத்தர் பணிக்கு நடந்த போட்டித் தேர்வில் பல்வேறு முறை கேடுகள் அரங்கேறியுள்ளது. தேர்வுக்காக சுமார் 5 ஆண்டுகள் வரை கடுமையாக உழைத்த இளைஞர்கள் அரசுப்பணி கனவை சிதைத்துள்ளனர்.

முறைகேடாக நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வு எழுதிய இளைஞர்களின் குறைகளை முழுமையாக கேட்டறியாத முதல்- அமைச்சர் ஒன்றும் செய்ய முடியாது என பேசியுள்ளார்.

முதல்-அமைச்சரின் இந்த பேச்சு, 3 தொகுதிகளை சேர்ந்தவர்களை மட்டுமே சுருக்கெழுத்தர் பணிக்கு தேர்வு செய்வதற்கான திட்டமிட்ட சதியாக இருக்க லாமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்தில் நேர்மையாக தேர்வு நடத்து வதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட வில்லை. தேர்வு தொடங்கும் நேரத்தை கணக்கிட அனைவரும் பார்க்கும்படி யாக கடிகாரம் அமைக்கப்படவில்லை.ஆங்கில இலக்கணமும் பிழையாக வாசிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அரை குறையாக, முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை கவர்னர் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். நேர்மையாகவும், வெளிப்படையாகவும் சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News