புதுச்சேரி

மாநில அளவிலான பெத்தாங் போட்டியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

மாநில அளவிலான பெத்தாங் போட்டி

Published On 2023-07-02 11:34 IST   |   Update On 2023-07-02 11:34:00 IST
  • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி, முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

உப்பளம் நேதாஜி விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இப்போட்டியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி, முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நேதாஜி நகர் பெரியபாளையத்தம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் நேதாஜி விளையாட்டு கழக நிர்வாகிகள் தி.மு.க.ஆதிதிராவிட துணை அமைப்பாளர் தங்கவேலு நேதாஜி நகர் தி.மு.க. கிளை செயலாளர்கள் காத்தலிங்கம், ராகேஷ், மற்றும் செழியன், மோகன், பாலாஜி, இசை, பிரதீப், ராஜீ, முத்து, வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News