புதுச்சேரி

புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனியில் கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்ற காட்சி.

புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனி

Published On 2023-07-24 12:06 IST   |   Update On 2023-07-24 12:06:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • தந்தை பிச்சை முத்து தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி, துப்ராயப்பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி காலை 7 மணிக்கு அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு தேர் பவனி நடந்தது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் 22-ந் தேதி காலை 6.30 மணிக்கு இருதய ஆண்டவர் உதவி பங்கு தந்தை சின்னப்பன் தலைமையில் திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7 மணிக்கு புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்கா பங்கு தந்தை பிச்சை முத்து தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது.

ஆடம்பர தேர் பவனியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News