19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கிய காட்சி.
விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் துண்டு பிரசுரம் விநியோகம்
- 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில விளை யாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் விளையாட்டு வீரர்களின் 19 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவிந்த ராஜ், பாடி பில்டர் பிரகதீஸ், மால்கம் கணேஷ் , கூடோ சந்தோஷ், அசோக், வெங்கடாஜலபதி, சிலம்பம் அன்பு நிலவன், சமூக ஆர்வலர்கள் கோகுல் காந்தி, வீரபாரதி, சந்துரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புதுவை அரசு விளையாட்டு வீரர்களை புறக்கணித்து வரும் செயல்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் ஆறுமுகம் ,ரமேஷ், பிரவீன் உள்ளிட்ட ஏராளமான விளை யாட்டு சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சதீஷ் வர வேற்றார். முடிவில் செந்தில் வேல் நன்றி கூறினார்.