போராட்டத்தில் விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் பேசிய காட்சி.
விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் போராட்டம்
- போலீசாருடன் வாக்குவாதம்
- புதுவை விளையாட்டு வீரர் நலச்சங்கத்தினர் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் எதிரே போராட்டம் நடத்தப்போ வதாக அறிவித்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் மற்றும் அங்குள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தை பராமரிக்கவும், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி, இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள போதிய மின்விளக்கு வசதி ஆகிய வற்றை செய்து தரவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை விளையாட்டு வீரர் நலச்சங்கத்தினர் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் எதிரே போராட்டம் நடத்தப்போ வதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று மாலை அனைத்து விளையாட்டு வீரர்கள் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென விளையாட்டு மைதான கேட்டை பூட்டு போட்டு திடீர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கீதநாதன், கோவிந்தராஜ், சதீஷ், பிரகதீஸ்வரன், செந்தில் வேல், டி.வி.நகர் ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற் பட்டோர் கலந்து கொண் டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஒதியஞ்சாலை இன்ஸ் பெக்டர் வெங்கடாஜலதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மைதா னத்தின் வாயில் கதவை ஏன் மூடுகிறீர்கள்? என போலீசார் கேட்டனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் வாயில் கதவு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விளையாட்டு துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். விளை யாட்டு உபகரணங்கள், தேசிய போட்டிகளில் பங்கேற் கும் வீரர்களுக்கு அரசு உதவித்தொகை, ஊக்கத் தொகை ஆகியவற்றை நேரடியாக வழங்கவும், மைதானத்தின் அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி டவும், போதிய செக்யூரிட்டி களை பாதுகாப்புக்கு நியமி த்து பாதுகாப்பு வச திகளை மேம்படுத்தவும், ரூ.8 கோடி செலவு செய்து அமைக்கப்ப ட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை உடனே திறந்து பயன் பாட்டுக்கு கொண்டு வரவும், ராஜீவ்காந்தி உள்விளை யாட்டு அரங்கில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஏசி உபகரணங் களுக்கு மின் இணைப்பு வழங்கவும் கோரி கோஷ மிட்டனர்.