கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு திருவிழாவை டீன்.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அருகில் பாடி பில்டர் சாம்பியன் பாஸ்கரன் மற்றும் பலர் உள்ளனர்.
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டு திருவிழா
- கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
- டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பிறகு கோடி ஏற்றுதல், ஜோதி ஓட்டம், மாணவர்களின் கொடி அணிவிப்பு நடந்தது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷகல்ல ன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகர் நிலை பல்கலைக்கழ கத்தின கீழ் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் விளையாட்டு திருவிழா தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் டீன் . பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி ஜோதி விளக்கு ஏற்றி வைத்து சுழற்கோப்பையை அறிமுகம் செய்து வைத்து தலைமை உரையாற்றினார். இயக்குனர் பொறுப்பு ஆண்ட்ரூ ஜான் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் சாம்பியன் பாஸ்கரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் ராகேஷ் சேகல் , முன்னாள் டீன்.டாக்டர் கொட்டூர், கல்வி ஆராய்ச்சி யின் டீன் மகாலட்சுமி மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் குராக் குருவில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு இருந்தனர் விருந்தினர்களை டீன். டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பிறகு கோடி ஏற்றுதல், ஜோதி ஓட்டம், மாணவர்க ளின் கொடி அணிவிப்பு நடந்தது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, விஷ்ணு வர்தன், நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஐயம்மா, டாக்டர் சவீதாபேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.