புதுச்சேரி

கோப்பு படம்

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு

Published On 2023-06-13 05:20 GMT   |   Update On 2023-06-13 05:20 GMT
  • ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் ராஜ் நிவாசில் நடந்தது.
  • ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை நிர்வாக அதிகாரி ருத்ரகவுடு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் ராஜ் நிவாசில் நடந்தது.

தலைமை செயலர் ராஜீவ் வர்மா, கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுதரி, பொதுப் பணித்துறை செயலாளர் மணிகண்டன், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை நிர்வாக அதிகாரி ருத்ரகவுடு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதிய திட்டங்களை தொடங்க வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் கவர்னர் தமிழிசை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News