புதுச்சேரி

ஹைமாஸ் மின் விளக்குகளை சொந்த செலவில் சீரமைத்து சிவா எம்.எல்.ஏ. இயக்கி வைத்த காட்சி.

ஹைமாஸ் மின் விளக்குகளை சொந்த செலவில் சீரமைத்த சிவா எம்.எல்.ஏ.

Published On 2023-08-22 08:29 GMT   |   Update On 2023-08-22 08:29 GMT
  • ஹைமாஸ் மின் விளக்குகள் எரியாமல் இருந்தது.
  • எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவுக்கு தொடர் புகார் வந்தது.

புதுச்சேரி:

வில்லியனூர் சுல்தான்பேட்டை, ஆத்து வாய்கால்பேட், மூர்த்தி நகர், பட்டாணிகளம், உத்திர வாகினிப்பேட், பெரியபேட், புதுபேட், ஒதியம்பட்டு, கொம்பாக்கம் ஆகிய பகுதி களில் பல ஆண்டுகளாக ஹைமாஸ் மின் விளக்குகள் எரியாமல் இருந்தது.

இதுபற்றி தொகுதி எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவுக்கு தொடர் புகார் வந்தது. இதனையடுத்து சிவா எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் 70 எல்.இ.டி ஹைமாஸ் மின் விளக்குகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் மணிகண்டன், அவைத் தலைவர் ஜலால் , கபூர், ரமணன், சபரி நாதன், காளிதாஸ், மிலிட்டரி முருகன், பக்ரூத், சர்மா, ஹாஜிபாய், சிராஜிதீன், கந்தசாமி, திலகர், சக்திவேல், சுப்பிரமணி, கார்த்திகேயன், சுல்தான், அஜஸ்ரப்அலி, அரி, ரகு, அய்யனார் மற்றும் ஊர் பொது மக்கள், ஜமாத் தார்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News