புதுச்சேரி

புஷ்கரணி நடைபெறும் சங்கராபரணி ஆற்றில் பக்தர்கள் நீராடி வணங்கிய காட்சி.

null

கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் வராஹி யாகம்

Published On 2023-04-24 15:11 IST   |   Update On 2023-04-24 15:16:00 IST
  • சங்கராபரணி புஷ்கரணி விழா
  • பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது.

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது.

ஆதி புஷ்கரணி விழாவின் 3-ம் நாளான இன்று காலை 9 மணிக்கு வராஹி சிறப்பு யாகம், வேத பாராயணம், சைவாகம பாராயணம், பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது.

இதில் திரான பக்தர்கள் புனித நீராடி பங்கேற்றனர். மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு கங்கா ஆரத்தியும், 6.30 மணிக்கு மங்கள இசையுடன், வாண வேடிக்கை நடத்தப் படுகிறுது. இரவு 7.30 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

புஷ்கரணி விழாவில் இன்று மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திர பக்தர்களுக்காக சிறப்பு யாகம் நடந்தது. இந்த நட்சத்திரத்தை கொண்ட பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.

சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் புதுவையில் இருந்து திருக்காஞ்சிக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News