புதுச்சேரி

கோப்பு படம்.

சக்தி சோலைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-28 09:59 IST   |   Update On 2023-05-28 09:59:00 IST
  • கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடை பெற்றன.
  • பாலகணபதி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும், ராஜகோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரில் பிரசித்தி பெற்ற சக்தி சோலைவாழியம்மன் கோவில் உள்ளது.

 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடை பெற்றன.

மேலும் புதிதாக 2 நிலை கருவறை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கு கிறது.

 (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 31-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு பாலகணபதி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கும், ராஜகோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை 10.15 மணிக்கு சக்தி சோலைவாழியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சக்திசோலை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News