புதுச்சேரி

கோப்பு படம்.

பள்ளி,கல்லூரிகளில் பாலியல் கல்வி கற்பிக்க வேண்டும்

Published On 2023-04-24 12:20 IST   |   Update On 2023-04-24 12:20:00 IST
  • இளம் பெண்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
  • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும்.

புதுச்சேரி:

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இளம்பெண்கள் மாநாடு முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

விழாவுக்கு அகல்யா தலைமை வகித்தார். உமாசங்கரி,மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம் பேசினார்.

அந்தோணி,அமுதா, ஹே மலதா,பெருமாள்,எழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;- பெண்கள் மீதான பாலியல் பிரச்சினைகள் குறித்து புகார் அளித்திட அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும்.

படித்த இளம் பெண்களை தொழில் முனைவோர் ஆக்கிட பயிற்சி அளித்து பிணையின்றி கடன் உதவி வழங்கிட வேண்டும்.பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்க பள்ளி கல்லூரிகளில் பாலியல் கல்வியை வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

முடிவில் கீர்த்தனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News