புதுச்சேரி
மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய காட்சி.
null
நேஷனல் பள்ளி நிர்வாகிக்கு கல்வி செம்மல் விருது
- மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
- நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குனர் கிரண் குமாருக்கு கல்விச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் சங்கமம் அறக்கட்டளை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால், ஆகியோர் கலந்து கொண்டு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும் ஆண்டு தோறும் சாதனை மாணவர்களை உருவாக்கி கல்வி வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றி வரும் தவளகுப்பம் நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குனர் கிரண் குமாருக்கு கல்விச்செம்மல் விருது வழங்கப்பட்டது.