கிருமாம்பாக்கம் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்த போது எடுத்த படம்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் அறிவியல் தினவிழா
- புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடைபெற்றது.
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கல்லூரியின் ஆராய்ச்சி சபை மாணவர் அமைப்பும் இணைந்து தேசிய அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் ஆலோசனையின் படி, இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர் சுகந்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் கார்த்திகேயன் பங்கேற்று மாணவர்களுக்கு மருத்துவ துறையில் அறிவியலின் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியின் துணை தலைவர் பேராசிரியர் சசி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 50 விளக்க மாதிரிகளை சமர்பித்து விளக்கம் அளித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
முடிவில் உதவி பேராசிரியரும் கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் துணை தலைவருமான கிருஷ்ணக்குமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் தலைவர் சுகந்தி, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணக்குமார், ஆராய்ச்சி சபையின் உறுப்பினர்கள் தீபிகா, கோவரத்ன விஷ்ணு, கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள், அனிதா, வளர்மதி, வெண்ணிலா மற்றும் விரிவுரையாளர் மிராக்ளின் ஷேரண், ஜெயசூரியா, தமிழ் செல்வன், என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் நுண்கலை மாணவர்கள் செய்திருந்தனர்.