புதுச்சேரி

கர்நாடகா மாநிலம் மைசூரில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் நடந்த மண்டல பயிற்சி முகாமில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசிய காட்சி.

முதியோருக்கு உதவித்தொகை-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்

Published On 2023-01-18 15:00 IST   |   Update On 2023-01-18 15:00:00 IST
  • சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த 2 நாள் பயிற்சி அரங்கு மைசூரில் நடக்கிறது.
  • மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர், 3-ம் பாலினத்தை சேர்ந்த 73 பேர் பயனடைகின்றனர்.

புதுச்சேரி:

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த 2 நாள் பயிற்சி அரங்கு மைசூரில் நடக்கிறது.

கூட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூகநலத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது.

கருத்தரங்கில் புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர், 3-ம் பாலினத்தை சேர்ந்த 73 பேர் பயனடைகின்றனர். மாதந்தோறும் பயனாளிகள் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் 2022-23-ம் ஆண்டுக்கு ரூ.455.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயனாளிகள் இறந்து விட்டால் ஈமச்சடங்கு நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2 ஆயிரத்து 200 முதியோருக்கு ரூ.1.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதியோர் உடல்நலனில் அக்கறை கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 100 முதியோர் சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு முன் உதவியாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் உதவுகிறது. முதியோர்க ளுக்கு ஆலோசனை, உதவிகளை வழங்க தேசிய உதவி எண் 14567 சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News