புதுச்சேரி

சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

சுகாதார ஆய்வாளர்கள் வெள்ளை நிற ஒவர்கோட் அணிய அனுமதி-சங்க பொதுக்குழு வலியுறுத்தல்

Published On 2023-04-10 08:14 GMT   |   Update On 2023-04-10 08:14 GMT
  • புதுவை முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.
  • அமைப்பு செயலாளர் இளையதாசன், தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வுக்கு தடை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார்.

புதுச்சேரி:

புதுவை முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.

தலைவர் திருமலை தலைமை வகித்தார். அமைப்பு செயலர் கிரி வரவேற்றார். கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், சுகாதார ஊழியர் சம்மேளன தலைவர் கீதா, அமைப்பு செயலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ஜவகர் பணி மறுகட்டமைப்பு செய்ய தடையாக உள்ள ஒரு நபர் குழு குறித்து விளக்கினார்.

அமைப்பு செயலாளர் இளையதாசன், தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வுக்கு தடை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி னார். வரவு, செலவு சங்க செயல்பாடுகள் குறித்து பொருளாளர் முனுசாமி, சங்க போராட்டங்கள் குறித்து செயலாளர் ஜெகநாதன் பேசினர்.

கூட்டத்தில், பொது சுகாதார சட்டத்தை உடனே தகுந்த மாற்றங்கள் செய்து அமல்படுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு வெள்ளை நிற ஓவர்கோட் அணிந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

சுகாதாரத்துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கும் சான்றிதழ்களை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட ஆய்வாளர்கள் மேற்பார்வை யிட்டு, மருத்துவ அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. ஈணை செயலாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News