புதுச்சேரி
சம்பள உயர்வு வழங்க கோரி ரொட்டி பால் ஊழியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு அளித்த காட்சி.
null
ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
- பால் ஊழியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வலியுறுத்தினர்.
- சம்பள உயர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
புதுச்சேரி:
புதுவை அரசு துறைகளில் தினகூலி, பகுதி நேர பணிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ரொட்டி பால் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இந்த சம்பள உயர்வை வழங்க கோரி ரொட்டி பால் ஊழியர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வலியுறுத்தினர்.
இதனையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.