புதுச்சேரி

கோப்பு படம்.

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4 லட்சம் அபேஸ்

Published On 2023-04-19 15:13 IST   |   Update On 2023-04-19 15:13:00 IST
  • ஆசை அதிகமான நாகேஸ்வரி ரூ.1 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை கூடப்பாக்கம் மேலக்கரை வீதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி .

இவர் இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் கிரிப்டொ கரன்சியில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபத்தை பெறலாம் என கவர்ச்சிகரமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை நம்பி நாகேஸ்வரி முதலில் ரூ.4ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். உடனே இருமடங்கு பணம் வந்துள்ளது. பின்னர் படிப்படியாக பணத்தை முதலீடு செய்வதை அதிகரித்துள்ளார். அதற்கான இரட்டிப்பு பணம் வரவே, ஆசை அதிகமான நாகேஸ்வரி ரூ.1 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான இருமடங்கு பணம் வரவில்லை.

அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரி குறிப்பிட்ட இணையதளத்தை தொடர்பு கொண்டபோது, இன்னும் அதிக பணம் முதலீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய நாகேஸ்வரி ரூ.4 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் உரிய தொகையை தராமல் அந்த தளம் முடக்கப்பட்டிருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகேஸ்வரி வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News